
மக்களுக்கான ஆவேசக் குரல் வென்றது
286 total views, 1 views today
ரா.தங்கமணி
ஷா ஆலம்,அக்.30-
‘போட்ட போடுல ஒரே வாரம்தான்… Enjin வந்து இறங்கிடுச்சு… இப்படிப்பட்ட தலைவன்டா எங்களுக்கு வேணும்’ எனும் புகழாரத்துடன் வெற்றி கண்டுள்ளது மக்களுக்காக குரல் கொடுத்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் ஆவேசம்.
மழை பெய்தாலே வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் தனது சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண களமிறங்கிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ், வடிக்கால், நீர்பாசனத் துறை அதிகாரிகளின் மெத்தன, அலட்சியப் போக்கை கண்டித்த காணொளி சமூக ஊடகங்களின் வைரலானது.
பெரும் சர்ச்சையாக வெடித்த கணபதிராவின் மக்களுக்கான குரலின் எதிரொலியாக நீர் சுத்திகரிப்பு மையத்தில் செயல்படாமல் இருந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளதோடு புதிதாக இரண்டு இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
முடங்கி கிடக்கும் மக்களுக்கான பிரச்சினைகளில் ஒரு தலைவனின் குரல் ஆவேசமாக எதிரொலித்தால் அரசு இயந்திரம் துரிதமாக செயல்படும் என்பதற்கு இதுவே சிறந்த சாட்சி.