மக்களுக்கான களப்பணியில் நின்றுக் கொண்டிருக்கிறேன்; நிச்சயம் வெற்றியை தருவர் – டாக்டர் சத்திய பிரகாஷ்

Malaysia, News, Politics

 172 total views,  2 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தாம் வெற்றி அடைந்தால் உலு சிலாங்கூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையே தாம் முதன்மை நோக்கமாக கொண்டிருப்பதாக டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

அடிப்படை தேவைகள் மட்டுமல்லாது தொகுதி முன்னேற்றமும் மக்களின் வாழ்வாதார மேம்பாடும் மிக  முக்கிய கூறுகளாக கொண்டுள்ளேன்.

மக்களுக்கான களப்பணியில் நின்றுக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் வெற்றி வாய்ப்பை தொகுதி மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல் தம்மை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அதனை வரவேற்கிறேன், ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆயினும் தங்களின் பிரதிநிதி யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு மக்களின் கையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

Leave a Reply