மக்கள் குடியிருப்புன் அவலங்களை அறியாதவரா மந்திரி பெசார்? – தீபக் ஜெய்கிஷன்

Malaysia, News, Politics

 138 total views,  1 views today

கிள்ளான் –

பங்சாபுரி பண்டமாரான் இண்டா குடியிருப்புப் பகுதியில் மக்கள் மிகவும் அசெளகரியமான சூழலில் வாழ்வதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அறிவாரா? என்று கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தீபக் ஜெய்கிஷன் கேள்வி எழுப்பினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் குடிநீர் தொட்டி ஒருமுறை கூட பராமரிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கின்றனர்.

2, 3 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத காலவாய், முறையாக பராமரிக்கப்படாத குப்பை தொட்டி என துர்நாற்றத்திற்கும் சுகாதாரம் இல்லாமலும் இப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.

மாநில அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள அந்த குடியிருப்பின் மாத வாடகையை மக்கள் மாநில அரசுக்கே செலுத்தும்போது அதனை முறையாக பராமரிக்க மட்டும் அக்கறை கொள்ளாதது ஏன்? என்று இன்று கிள்ளான் மாநகர் மன்றத்தின் முன்பு ஆட்சேபப் போராட்டத்தை முன்னெடுத்த தீபக் ஜெய்கிஷன் வினவினார்.

மாநில மந்திரி பெசாரும் சட்டமன்ற உறுப்பினரும் இம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவார்களா? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply