மக்கள் நலனுக்காகவே மாநில அரசுகளை கலைக்கவில்லை- குணராஜ்

Malaysia, News, Politics

 205 total views,  2 views today

ரா.தங்கமணி

கிள்ளான் –

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல்  விரைவில் நடத்தப்பட்டாலும் பக்காத்தான் ஹராப்பான் வசமுள்ள மாநில அரசுகளை கலைக்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது மக்கள் நலனுக்காகவே என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

நவம்பர் மாத மத்தியில் நாட்டில் பெருமழை பொழியலாம் எனவும் அதனால் வெள்ளப் பேரிடர் ஏற்படலாம் எனவும் வானியல் துறை எச்சரித்துள்ளது.

ஆனால் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அதிகாரத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காக தேசிய முன்னணி/ அம்னோ 15ஆவது பொதுத் தேர்தலை சீக்கிரமே நடத்திவிட வேண்டும் என துடிக்கிறது.

மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெள்ளப் பேரிடரில் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சிலாங்கூர் மாநிலம் ஏற்கெனவே வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டுள்ள நிலையில் தேர்தலில் தீவிரம் காட்டுவதை விட மக்கள் நலனை முன்னிறுத்தியே தேர்தலை அடுத்தாண்டு சந்திக்க துணிந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று தவணையாக சிலாங்கூர், பினாங்கு ஆகியவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசமுள்ள நிலையில் மாநில அரசின் திட்டங்களின் வழி மக்கள் அடைந்துள்ள பயனின் எதொரொலியாக இம்மாநிலங்களை இக்கூட்டணி மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூகத் தொடர்பு சிறப்பு அதிகாரியுமான குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இதர செய்திகள்:

Leave a Reply