
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் ! – டத்தோ ஶ்ரீ சரவணன்
153 total views, 1 views today
8 மார்ச்சு 2023
அனைத்துலக மகளிர் நாளைக் கொண்டாடும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் நாள் நல்வாழ்த்துகள்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
– பாரதி
பெண்ணினத்தின் பேதமை நீங்கப் பெரிதும் முயலவேண்டும் என முழங்குகிறார் பாரதியார். பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடும், வீடும் இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். எனவே பெண்களைப் போற்றுவோம். அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத்திற்கு வழிவகுப்போம்.
மகளிர் நாள் வாழ்த்துகளுடன்,
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்