
மனிதநேயத்தில் ‘மனிதம்’
413 total views, 1 views today
கூலிம்-
மனிதநேய உதவிகள் புரிந்திட பணம் முக்கியமானதல்ல, அதையும் தாண்டி மனிதமே போதுமானது என்பதை உணர்த்தியுள்ளது மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்,எஸ்,தனேந்திரனின் பேஸ்புக் பதிவு.
கெடா, கூலிமில் தமது கெடா மாநில செயற்குழுவினருடன் பேசி கொண்டிருந்தபோது தனது தாய் தந்தையுடன் கடைக்குவந்த இளைஞன் திடீரென மயக்கமுற்று சரிந்து விழுகிறார். கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவ்விளைஞனின் அருகில் செல்ல அனைவரும் தயக்கம் காட்டும் நிலையில் மனிதமே என்றும் உயர்வானது என்பதை நினைத்து அந்த இளைஞனை தூக்கிச் சென்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிக்கரம் நீட்டியுள்ளார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.
ஒரு சக மனிதனாக, ஆணாக, கணவனாக, தந்தையாக அந்த இளைஞனின் மீதான கருணையுணர்வு வெளிபட்டது. அந்த சமயத்தில் அந்த இளைஞனின் குடும்பத்திற்கு செய்ய முடிந்த உதவியாக அது அமைந்தது. ஓர் உயிரை காப்பாற்றிய நிம்மதி என் மனதுக்கு கிடைத்தது.
அச்சமயம் பெருந்தொற்றை காரணமாக பலர் உதவ தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் இத்தகைய சூழலில் எதற்கும் காத்திராமல் உதவிக்கரம் நீட்ட முனைய வேண்டும். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பான்,
தோல் நிற கலாச்சாரம், சமயம் ஆகியவற்றை கடந்து நிற்கும் மனிதநேயம் அனைத்து மனிதருக்கும் சமமானதே என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தமது பதிவில் குறிப்பிட்டார்.