மன அழுத்தத்திலிருந்து விடுபட VHGLOBAL நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆலோசனை சேவை

Uncategorized

 309 total views,  1 views today

டி ஆர் ராஜா


பத்து ஊபான் ஆக 9

கோவீட் 19 தொற்றுநோய் ஒவ்வொரு நாளும் மக்களின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், சில இடங்களில் உணர்ச்சி மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி வருகின்றது .இதனால் பலர் வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாது தற்கொலைகளை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் .


அதனை முறியடிக்கும் நோக்கத்தில் பத்து ஊபன் சட்டமன்ற உறுப்பினர் எம் குமரேசன் VHGLOBAL நிறுவனத்துடன் இணைந்து பொது மக்களை காப்பற்றும் சேவை நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ..
Mental Stress Counselling Centre’ எனப்படும் இலவச ஆலோசனை சேவைகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது. வழங்க அண்மையில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தகவலின்படி இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி முதல் மே வரை) பினாங்கில் 53 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன . இதில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தற்கொலை செய்துக் கொள்ளும் தற்கொலை முயற்சிகள் 22 பதிவுகள் பதிவாகியுள்ளன

எனவே, பொருளாதார அழுத்தம், வருமான இழப்பு, இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் வகையில் கடந்த ஆண்டு முதல் நீடித்து வரும் சூழ்நிலையை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்; பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தங்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தைப் பற்றி புகார் செய்ய சேவை மையத்திற்கு வந்துள்ளனர், சுங்கை டுவா , தாமான் பெகாகா அருகில் உள்ள பத்து உபான் சட்டமன்ற சேவை மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் எம் குமரேசன் கூறினார்.

மேலும், VHGLOBAL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. பேராசிரியர். எமரிடஸ் டாக்டர். ஆர்.சுரேஸ்வரன் மற்றும் VHGLOBAL நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி. டாக்டர். முஹம்மது அசிராஃப். ஆகியோர் வருகையளித்திருந்தனர்.

இந்நடவடிக்கைக்காக வெ.10,000 ஆரம்ப ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பத்து உபான் மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே நேரத்தில், வெவ்வேறு தனிநபர்களுக்கு பதிவின் அடிப்படையிலும் அவர்களின் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த சேவை வழங்கப்படுவதாக அவர் மேலும் கூறினார் .

தற்கொலை என்பது பிரச்சனையை தீர்க் ஒரு வழி அல்ல என்று நான் நினைக்கிறேன், சமூகத்தில் யாரும் தங்கள் உயிரை எடுக்க குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
“சில நேரங்களில் நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரிடம் பிரச்சனைகளைப் பற்றி சொல்வது கடினம் மற்றும் அந்நியர்களுடன் பேச வசதியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆலோசனை சேவை தேவைப்படுபவர்கள் www.vhglobal.org- ஐப் பார்வையிடலாம், 017-2770388 என்ற ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது பத்து ஊபன் சேவை மையத்திற்கு நேரில் வரலாம். என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் ,

Leave a Reply