மரண தண்டனை முழுமையாக அகற்றப்படவில்லை- பிரதமர்

Uncategorized

 261 total views,  1 views today

கோலாலம்பூர்-

மரணத் தண்டனை முழுமையாக அகற்றப்படவில்லை. அது தொடர்ந்து அமலில் அமலில் இருக்கும். கடும் குற்றம் புரிந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதா இல்லையா?என்பதை தேர்வு செய்யும் முடிவு நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் போதைப் பொருள் குற்றங்களுக்கு முன்பு மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு தேர்வு இருக்காது. ஆனால் இனி ‘கட்டாயம்’ என்ற வார்த்தைக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள்.


இரண்டாவது தேர்வாக குற்றவாளிகளுக்கு பிரம்படியுடன் கூடிய ஆயுட்கால தண்டனையை நீதிபதிகள் விதிக்கலாம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீதிபதிகள் விதிக்கலாம் என்று பிரதமர் மேலும் சொன்னார்.

Leave a Reply