
மரியாதை நிமித்தமாக மனித வள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து உரையாடினார் டான்ஸ்ரீ நடராஜா
255 total views, 1 views today
கோலாலம்பூர் | 28-02-2023
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா நேற்று மரியாதை நிமித்தமாக மனித வள அமைச்சர் வ சிவகுமாரை சந்தித்து உரையாடினார்.
மனித வள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், செயலாளர் சேதுபதி மற்றும் பாலகுரு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து சிறப்பித்த மனித வள அமைச்சருக்கு இவ்வேளையில் டான்ஸ்ரீ டாக்டர் நடராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச் செயலாளர் மகேஸ்வரி மற்றும் டி. கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.