மருத்துவமனை நுழைவாயிலில் காரை செலுத்திய ஆடவர்

Malaysia, News

 214 total views,  1 views today

ஈப்போ-

தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட பதற்றத்தில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காரை நிறுத்திய மகனின் செயல் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஈப்போ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் நுழைவாயிலில் காரை நிறுத்தி உதவி அவ்வாடவர் உதவி கோரி உரக்க கூச்சலிட்டார்.
இதனை தொடர்ந்து அவ்வாடவரை சமாதானப்படுத்திய மருத்துவமனை தரப்பினர் வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
நேற்றிரவு 11.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்பதால் இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்படவில்லை என்று பேரா போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார்.

Leave a Reply