மருத்துவமனை வரை நீண்ட சண்டை

Uncategorized

 326 total views,  1 views today

ஈப்போ-

காதல் விவகாரத்தால் இரு குடும்பங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை ஈப்போ மருத்துவமனை வரையிலும் நீடிக்கும் அளவுக்கு பெரும் சண்டையாக மாறியது.
இந்த சம்பவத்தில் சில ஆடவர்கள் காயமடந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்களுடன் தகராற்றில் சில ஆடவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் இரு புகார்களை பெற்றுள்ளனர். முன்னதாக ஆடவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தை கொண்டு மூவரை காயப்படுத்தியதாகவும் இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஈப்போ ராஜா பெர்மைசூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலத்ராஷ் வாஹிட் கூறினார்.
காதல் விவகாரம் தொடர்பில் இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை சண்டையாக மாறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
ஈப்போ மருத்துவமனையில் பாதுகாவலருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply