மருந்தால் பக்க விளைவு : காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நஜிப் !

Crime, Malaysia, News

 241 total views,  1 views today

– குமரன் –

காஜாங் – 12 செப். 2022

காஜாங் சிறையில் இருக்கும் நஜிப் உடல்நலக் குறைவால் தற்போது காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்.

அவருக்குக் கொடுப்பட்டப்ப இரத்த அழுத்த மருந்தின் மோசமானப் பக்க விளைவால் இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் காஜாங் மருத்துவமனையில் நஜிப் சேர்க்கப்படுவார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் 1எம்டிபி வழக்கு தொடர்பில நீதிமன்ற விசாரணைக்கு இன்று நண்பகல் 12.30 மணி வரையில் அவர் தயாராக இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஶ்ரீ ராம் குறிப்பிட்டார்.

எனவே, அந்த விண்ணப்பத்திற்கு வழி விட்டு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், அதே வழக்கு தொடர்பில் ஜாலான் ராஜா சூலான் என் பேங்க் வங்கியின் மேலாளர் உமாதேவியை உட்படுத்திய விசாரணை தொடர்ந்தது.

தமது பதவியைக் கொண்டு 1எம்டிபி நிதியில் இருந்து ரிம 2.3 பில்லியன் கையூட்டு பெற்றதாக 4 குற்றச்சாட்டுகளையும் பணமோசடி தொடர்பில் 21 குற்றச்சாட்டுகளையும் நஜிப் தற்போது எதிர்நோக்கியுள்ளார்.

Leave a Reply