மலாக்காவில் பிஎச் வென்றாக வேண்டும் – ராய்டு

Malaysia, News, Politics

 349 total views,  1 views today

ஷா ஆலம், நவ.9-

என்ன விலை கொடுத்தாவது மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது வெற்றியை  நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பராய்டு வலியுறுத்தினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின் முன்னோட்ட தேர்தலாக அமைந்துள்ள மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் 15ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

2018 பொதுத் தேர்தலில்  மலாக்காவில் 15 தொகுதிகளை வென்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மாநில அரசை கைப்பற்றிய நிலையில் ஷெராட்டன் நகர்வின் மூலம் பக்காத்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு  தேமு ஆட்சி அமைக்கப்பட்டது.

ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு  தேம  ஆட்சி அமைந்த போதிலும் அம்னோ தலைவர்களின் உட்பூசலால் மலாக்கா மாநில சட்டமன்றம் அக்டோபர் 5இல் கலைக்கப்பட்டது.

மாநில ஆட்சி கலைக்கப்பட்டதில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது.

புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மலாக்கா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தவளை அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply