மலாக்காவில் மஇகா போட்டியிடும்

Malaysia, News, Politics

 154 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.31-
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநில தேர்தலில் மஇகா போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்.


மலாக்கா, காடெக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா தனது வேட்பாளரை களமிறக்கும் என்று கூறிய அவர், மலாக்கா தேர்தலில் மஇகா போட்டியிடுவதில்லை என்று மத்திய செயலவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் அதை யார் வெளியிட்டது என்பதும் தெரியவில்லை எனவும் அவர் சொன்னார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காடெக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி.சாமிநாதனிடம் 307 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply