மலாக்காவில் ஹராப்பான் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியிருக்கலாம்- குணராஜ்

Malaysia, News, Politics

 182 total views,  3 views today

கிள்ளான் –

 அரசியல் நெருக்கடி காரணமாக கலைக்கப்பட்டுள்ள மலாக்கா மாநில ஆட்சி அதிகாரம் மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடம் வழங்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.

நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்ததை அடுத்து மலாக்கா மாநில அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து மாநில அரசு கலைக்கப்படுவதற்கு ஆளுநர் துன் டான்ஶ்ரீ அலி ருஸ்தாம்  ஒப்புதல் வழங்கினார்.

பெரிக்காத்தான் நேஷனல், பாரிசான் நேஷனல் கூட்டணியின் அரசியல் போராட்டங்களால் மலாக்காவில் நிலைத்தன்மையில்லாத அரசியல் சூழல் உருவெடுத்த நிலையில் மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி போதிய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அக்கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

யாரிடம் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரிடம் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்,அதை விடுத்து மாநில தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சட்டமன்றத்தை கலைத்திருக்கக்கூடாது.

நாட்டின் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் முடிவடையாத நிலையில் திடீர் தேர்தல் நடத்தப்படுவது மக்களின் வாழ்வுக்கும் பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பாக அமையலாம் என்று குணராஜ் குறிப்பிட்டார்.

Leave a Reply