மலாக்கா அரசியல் நெருக்கடியில் பக்காத்தான் ஹராப்பானை இழுக்க வேண்டாம்- ராயுடு

Malaysia, News, Politics

 428 total views,  1 views today

ஷா ஆலம்-

மலாக்கா மாநில அரசில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் பக்காத்தான் ஹராப்பானை இழுக்க வேண்டாம், மலாக்கா அரசியல் நெருக்கடியில் உண்மையிலேயே ஈடுபட்டுள்ள தரப்பு எது? என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின்  ஆலோசகர் பாப்பராயுடு வினவினார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே.

இந்த ஒப்பந்தத்திற்கும் மலாக்காவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் கையெழுத்திடப்படவில்லை.  எனவே, உங்கள் பிரச்சனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், பக்காத்தான் ஹரப்பானை இழுக்க வேண்டாம் என்று அவர் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Reply