மலாக்கா தேர்தலில் 112 வேட்பாளர்கள்

Uncategorized

 316 total views,  1 views today

அலோர்காஜா-

28 தொகுதிகளுக்கான மலாக்கா மாநில தேர்தலில் 112 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் 112 வேட்பாளர்களிள் 96 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள் ஆவர்.

இதில் 28 தேசிய முன்னணி வேட்பாளர்களும் 28 பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களும் 28 பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களும் 5 புத்ரா வேட்பாளர்களும் ஒரு இமான் வேட்பாளரும் 22 சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

முதிய வேட்பாளராக தேமுவைச் சேர்ந்த 68 வயது வேட்பாளர் பெங்கலான் பத்து சட்டமன்றத் தொகுதியிலும் இளம் வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சுங்கை ரம்பாய் சட்டமன்றத் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

Leave a Reply