மலாக்கா வரலாறு ஜொகூரிலும் எழுதப்படும்

Malaysia, News, Politics

 301 total views,  2 views today

ரா.தங்கமணி

ஜொகூர்பாரு-

கடந்த கால தேர்தல்களில் இந்தியர்கள் செய்த தவற்றை மீண்டும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் செய்ய மாட்டார்கள் என்று மஇகா தலைமைச் செயலாளர் ஆர்.டி.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த கால தேர்தலில் இந்தியர்கள் எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரித்தாலும் நிலையில்லாத ஆட்சி, உட்கட்சி பூசல் போன்றவற்றால் சிறப்பான ஆட்சியை வழங்க தவறிய அக்கூட்டணி மீது இந்தியர்கள் மட்டுமல்லாது மலேசியர்களே நம்பிக்கை இழந்துள்ளனர்.


இந்த நிலையில் தேசிய முன்னணி, மஇகாவுக்கு இந்தியர்கள் ஆதரவு பெருகியுள்ளது என்பது மலாக்கா மாநில தேர்தலில் நிரூபணமானது.
அதே நிலைப்பாடு ஜொகூர் மாநில தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதோடு மஇகா போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதோடு தேமுவின் வெற்றியும் உறுதி செய்யப்படும் என்று ஆர்.டி.ராஜா ராஜா கூறினார்.

Leave a Reply