மலாய்க்காரர் தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் ! – சிவசுப்பிரமணியம் சவால்

Malaysia, News, Politics

 83 total views,  2 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர் – 23 ஆகஸ்டு 2022

மஇகாவை சீண்டுவதையே தனது சமுதாய கடப்பாடாகக் கொண்டிருக்கும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் திராணி உடையவர் என்றால் வரும் பொதுத் தேர்தலில் மலாய்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சவால் விடுத்தார்.

சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள ஜசெகவில் சீனர்களின் தயவில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள சிவகுமாருக்கு மஇகாவை பற்றி பேச துளியும் அருகதை கிடையாது.

மஇகா இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றக்கூடிய கட்சி. ஜசெகவை போன்று சீனர்களின் தயவில் இருந்து கொண்டு இந்திய சமுதாய நலனில் அக்கறை இருப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.

மஇகா ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்திய சமுதாயத்திற்கான சமூக கடப்பாட்டிலிருந்து விலகி கொண்டதில்லை.
பல போராட்டங்களுக்கு மத்தியில் மஇகா வெற்றி, தோல்விகளை கண்டுள்ளது.

ஆனால் மஇகாவை விமர்சிக்கும் சிவகுமார் மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு உங்கள் வெற்றியை உறுதி செய்து காட்டுங்கள் என்று சிவகுமாரை சாடினார் சிவசுப்பிரமணியம்.

Leave a Reply