
மலேசியர் என்பதே ‘மலேசியா’; அதுவே அதன் வலிமை
281 total views, 2 views today
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
1957இல் சுதந்திரம் பெற்ற மலாயாவுடன் சபா, சரவாக், சிங்கப்பூர் ஆகியவை இணைந்த புதிய தேசத்தை ‘மலேசியா’ என 1963 செப்டம்பர் 16இல் பிரகடப்படுத்தினர் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் நாள் மலேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல கலாச்சாரம், பண்பாடு என அனைவரும் வேறுபட்டிருந்தாலும் மலேசியர்கள் என்பதே நமது அடையாளம். ‘மலேசியர்’ என்ற அந்த ஒற்றைச் சொல்லே நம் அனைவரையும் இணைத்துள்ளது.
மலேசியர்கள் என்பதுதான் நமது அடையாளம். மொழி, மதம், சமயம், கலாச்சாரம், பண்பாடு என நாம் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமை என்ற ஒற்றைச் சொல்லில் அனைவரும் மலேசியர்களாக இணைந்துள்ளோம்.
மலேசியா என்றால் பல்லின மக்கள், பல்வகை கலாச்சாரங்கள், வெவ்வேறு சமயங்கள், நாவில் சுவையூறும் உணவுகள் என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். மலாய்க்காரர்களின் உணவில் இந்தியர்களின் கலவை இருப்பதும், இந்தியர்களின் உணவில் சீனர்களின் கலவை இருப்பதும் இங்கு வழக்கமான ஒன்றாகும். மலேசியாவில் இந்தியர்களை தவிர சீனர்களும் மலாய்காரர்களும் வாழை இலையில் உணவு உண்பது உண்டு. உணவு மட்டுமின்றி உடை, மொழி, பாவனை என எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பின்னி பிணைந்துள்ளோம்.
பல்வேறு கலாச்சாரத்தின் தொகுப்பாக மலேசியா அமைந்துள்ளதே அதன் வலிமை ஆகும். நாம் மலேசியர்கள் என்பதில் பெருமை கொள்வோம்!