மலேசியாவில் இருந்து மும்பைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட விலங்குகள் ! இரு மலேசியர்கள் இந்தியாவில் தடுக்கப்பட்டனர் !

Crime, India, Malaysia, News, World

 85 total views,  1 views today

– குமரன் –

மும்பை – 9/10/2022

மலேசியாவில் இருந்து மும்பைக்கு மலைப்பாம்பு, ஆமைகள் போன்ற விலங்குகளைக் கடத்த முயற்சித்ததற்காக இரு மலேசியர்கள் இந்திய நாட்டின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அலங்கார மீன்கள் எனும் பெயரில் அவை கடத்த முயற்ச்க்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விலங்குகளை இந்திய அரசாங்க அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர்.

விக்டர் போலோ (வயது 36), இம்மானுவல் இராஜா (வயது 36) ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட விலங்குகளின் மதிப்பு ரிம 1.67 மில்லியனாகும் என தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சாஹாரில் உள்ள வான்வழி கார்கோ நிலையத்திற்கு வரவைக்கப்பட்டதை இந்திய சுங்கத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கார்கோ நிலையத்தை வந்தடையும்போது கடத்தப்பட்ட விலங்குகள் பரிசோதனைப் பகுதியைக் கடந்து இராஜாவால் கொண்டுவரப்பட்டது.

இருந்தாலும், சுங்கத்துறை அதிகாரிகள் இராஜா கொண்டு சென்ற வாகனத்தை அடையாளம் கண்டு தடுத்து வைத்தனர்.

பல்லி, உடும்பு, மலைப்பாம்பு, ஆமை என 665 வகை விலங்குகள் 13 பொட்டலங்களில் இருந்தன. ஆனால், அவற்றில் 548 உயிருடன் இருந்ததாகவும் மற்றவை இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்ட அந்த இருவரையும் விசாரித்ததில் டேவிட் லு என்ற ஆடவரிடமிருந்து கட்டளையைப் பெற்றதாகவும் இந்தப் பொட்டலங்களை இன்னோர் ஆடவருக்குக் கொண்டு சேர்க்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த விலங்குகள் அழிந்து வரும் வகைகள் பட்டியலில் உள்ளவை எனவும் எந்த நாட்டில் இருந்தும் எற்றுமதி – இறக்குமதி செய்யப்படத் தடை விதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply