மலேசியாவில் உள்ள தமிழக தொழிலாளர்கள் நாடு திரும்ப உதவுங்கள்- சீமான் கோரிக்கை

Uncategorized

 170 total views,  1 views today

சென்னை-

வேலைக்காக மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் உடனடியாக தாயகம் திரும்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு கடப்பிதழையும் பறிகொடுத்துள்ளனர். இதனால் முறையான ஆவணங்கள் இன்றி நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்களுக்கு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகமும் உதவி புரிவதில்லை.
உரிய ஆவணங்கள் இல்லாததால் குடிநுழைவு துறை முகாம்கள் தடுத்து வைக்கப்படும் தமிழக தொழிலார்களுக்கு தங்களது சொந்த செலவிலேயே நாடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்படும் தமிழக தொழிலாளர்களை தாயகம் கொண்டு வருவதற்கு ஏதுவாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply