மலேசியாவில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகியுள்ளது- கணபதிராவ்

Malaysia, News, Politics

 328 total views,  1 views today

ஷா ஆலம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதானது மலேசியாவின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் வெறும் 11 கோவிட்-19 சம்பவங்களே கண்டறியப்பட்டுள்ளன,. அதற்கு இரு வாரங்களுக்கு நாடாளுமன்றம் பூட்டப்பட்டுள்ளது. ஆனால் ஐடிசிசி-யில் கோவிட்-19 சம்பவங்கள் 204ஆக பதிவு செய்யப்பட்டபோதும் கூட ஒருநாள் மட்டுமே அம்மையம் மூடப்பட்டது. அதே போன்று பல உற்பத்தி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான கோவிட் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் வழக்கம் போல் அவை செயல்படுகின்றன.

இத்தகைய நடவடிக்கை சுகாதார துறை தலைமை இயக்குனர் உண்மையில் யார் உத்தரவை பின்பற்றுகிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது பிரதமரும், அவரது அமைச்சரவையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது ஒரு அவமரியாதைக்குரிய செயலாகும்.
நாட்டில் அவசரகால நிலை அமல்படுத்தும்போது வெறும் 6,000ஆக மட்டுமே இருந்த கோவிட்-19 சம்பவங்கள் தற்போது 17,000ஆக அதிகரித்துள்ளது. மாமன்னரையும் மக்களையும் மதிக்காமல் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் இந்த அரசுக்கு எதிராக கடந்த வாரம் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இத்தகைய சம்பவம் ஜனநாயகம் சீரழிந்து விட்டதையே காட்டுகிறது என்று கணபதிராவ் தெரிவித்தார்.

Leave a Reply