மலேசியாவுக்கு வருகை புரியும் விக்ரம் குழுவினர்; பேராவலில் ரசிகர்கள்

Cinema, India, Malaysia, News

 292 total views,  3 views today

கோலாலம்பூர்-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையீடு காண்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தை மலேசியாவில் DMY Creation நிறுவனம் வெளியீடு செய்கிறது. இந்நிலையில் இப்படத்தை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் உட்பட ‘விக்ரம்’ திரைப்படக் குழுவினர் மலேசியாவுக்கு வருகை புரியவுள்ளனர்.

வரும் மே 29ஆம் தேதி NU Central-இல் செய்தியாளர் சந்திப்புடன் விக்ரம் திரைப்படக்க்குழுவினரை ரசிகர்கள் நேரில் சந்திக்கலாம் என DMY Creation நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கண்ட ரசிகர்கள் ‘விக்ரம்’ திரைப்படக் குழுவினரை காண பெரும் ஆவலில் உள்ளனர்.

Leave a Reply