மலேசியா… அது மலேசியர்களின் தேசம்

Malaysia, News

 254 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

ஒரு தேசம்….. பல இனம், சமயம், மொழி, பலதரப்பட்ட கலாச்சாரம், பலவகை உணவுகள் என பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும் உணர்வுகள் மட்டும் ஒன்றாய் வெளிபடுகின்றன. அதுவே மலேசியாவின் சிறப்பு.. மலேசியர்களின் மாண்பு.
பல இன மக்கள் வாழ்கின்ற எந்தவொரு நாட்டிலும் காணப்பெறாத இனங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை உலகின் வேறு எந்த நாடுகளிலும் காண முடியாது.


ஒரே இன மக்கள் வாழ்கின்ற நாட்டில் கூட மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழலில் பல இன மக்களின் கலாச்சாரங்களையும் சமய நிகழ்வுகளையும் அனைத்து இன மக்களும் கொண்டாடி மகிழ்வது மலேசியர்களுக்கே உரித்தான இயல்பு.


1957இல் அடைந்த சுதந்திர காற்றை இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது பல இன மக்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின் அடையாளமாகும்.


64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழும் மலேசியர்கள் அதற்காக பாடுபட்ட தலைவர்களையும் தியாகிகளையும் அவர்களின் உணர்வுளையும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.


இனம், மதங்களை கடந்து ஒற்றுமையாலும் புரிந்துணர்வாலும் கட்டமைக்கப்பட்டதே மலேசியா. மூவின மக்களின் பிரதிநிதியாக தலைவர்கள் கையெழுத்திட்ட பின்னரே மலேசியாவின் சுதந்திரக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.


மலேசியா… எவன் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல. அது மலேசியர்களின் தேசம். இனம், மதம், மொழியை கடந்த ஒவ்வொரு குடிமகனின் உரிமை. மலேசியர்களாய் ஒன்றிணைவோம்…. அடுத்தத் தலைமுறைக்கு சொர்க்க பூமியாய் மலேசியாவை உருமாற்றுவோம்.


மெர்டெக்கா….. மேர்டேக்கா…. மெர்டேக்கா…..

Leave a Reply