மலேசியா இஸ்லாமிய நாடா? மதச்சார்பற்ற நாடா? -கணபதிராவ் காட்டம்

Malaysia, News, Politics

 379 total views,  1 views today

மொழியாக்கம்; ரா.தங்கமணி

ஷா ஆலம்-

முஸ்லீம் அல்லாதோர் மத கட்டுப்பாட்டு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த ‘மலேசிய குடும்பம்’ கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கடுமையாக சாடினார்.


மலேசியாவுக்கு இதுபோன்ற சட்டங்கள் தேவையில்லை, மாறாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்தக்கூடிய நல்லிணக்கச் சட்டமே தேவை.

முஸ்லீம் அல்லாதவர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா ஏன் வெளியிட வேண்டும்? இதில் ஜாக்கிமுக்கு என்ன அதிகாரம் உள்ளது? இஸ்லாமியர்கள் பிற மதங்களின் விவகாரங்களில் தலையிட முடியாது என அரசியலமைப்புப் பிரிவு 11 (4) தெளிவாக கூறுகிறது.


எங்கள் அன்புக்குரிய நாடான மலேசியா இஸ்லாமிய நாடா? அல்லது மதச்சார்பற்ற நாடா? இன்னும் சொல்லப்போனால் மலேசியா இஸ்லாமிய நாடு என்று அரசியலமைப்பு கூறுகிறதா? என கேள்வி எழுப்பிய கணபதிராவ், இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும் இஸ்லாமிய நாடு என்ற கருத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை துங்கு அப்துல் ரஹ்மான் ஒருமுறை தெளிவுப்படுத்தியுள்ளார். என்னுடைய கருத்தை விளக்க இதுவே போதுமானது என கூறிய கணபதிராவ், ஜாக்கிம் உருவாக்கியுள்ள புதிய 4 சட்டங்கள் உட்பட மதம் தொடர்பான துணை அமைச்சரின் அறிவிப்பு முஸ்லீம் அல்லாதோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று தமது கருத்தை பதிவிட்டார்.


முஸ்லீம் அல்லாதோரின் மத மேம்பாட்டு கட்டுப்பாடு சட்டம் உட்பட வரையப்பட்டுள்ள 11 புதிய சட்ட மசோதாக்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர் (இஸ்லாமிய பிரிவு) அஹ்மாட் மர்சூகி ஸாரி நேற்று கூறியிருந்தார்.

நன்றி: மலேசியா கினி

(குறிப்பு: மலேசியா கினி இணையதளத்தில் வெளியான செய்தியின் தமிழாக்கமே இந்த செய்தி…..)

Leave a Reply