மலேசிய இந்தியர்களின் பணத்தை சுரண்டி செல்லும் நடிகர்கள் – இராமசாமி சாடல்

Cinema, Malaysia, News, Politics

 238 total views,  1 views today

பட்டவொர்த்-

சினிமாவில் புகழ் பெற்றவர்களாக திகழும் ரஜினி, கமல் போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் தோல்வி கண்டவர்கள், அவர்கள் மலேசிய இந்திய சமூகத்தின் நலனுக்காக செலவிட்டதாக தாம் கேள்விபட்டதில்லை என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.

தனது ‘விக்ரம்’ படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில் மலேசியா வந்துள்ள நடிகர் கமல்ஹாசனை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரும் பிகேஆர் கட்சி தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்ததன் நோக்கம் என்ன? என்று அவர் வினவினார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்தை சந்தித்து அன்வார் உணவருந்துவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடிகர்கள் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக என்ன செய்திருக்கின்றார்?

மலேசியாவில் தங்களது படங்களை விளம்பரம் செய்யும் அந்த நடிகர்களின் படங்கள், இந்நாட்டில் நல்ல வசூலை ஈட்டும் என்பது நிச்சயம். அப்படத்தை பார்ப்பதற்காக இந்நாட்டிலுள்ள ரசிகர்கள் லட்சக்கணக்கில் செலவிடுவர். அதன்  வாயிலாக மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையே சுரண்டி செல்வதற்காக அந்த நடிகர்கள் மலேசியா வந்து செல்கின்றனர்.

அந்த நடிகர்களின் தங்களின் படத்தின் வெற்றியின் வாயிலாக  ஈட்டிய பணத்தை இந்நாட்டிலுள்ள வறிய நிலையில் இருக்கும் இந்திய சமூகத்திற்காக செலவிட்டதாக கேள்விபட்டதில்லை.

மக்கள் மத்தியில் பிரபலமானவராக திகழும் அன்வார், பிரபல தமிழ் திரைப்பட நடிகர்களுடன் பழகுவதன் வாயிலாக இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்திண் ஆதரவை பெற முடியுமென நம்பியிருக்கலாம். இந்நாட்டில் இந்திய சமூகத்தின் வறிய நிலையிலோ உதவி தேவைப்படுபவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல என்று இராமசாமி குறிப்பிட்டார்.

Leave a Reply