மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் இந்தியர்களுக்கான அரசியல் பேரணி

Malaysia, News

 347 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,ஜூலை 14-

மலேசிய இந்தியர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு தழுவிய நிலையில் இந்தியர் அணிவகுப்பு பேரணியை மலேசிய இந்திய்ர் குரல் இயக்கம் நடத்தி வருகிறது.

அண்மையில் இதன் முதலாவது நிகழ்ச்சி  பினாங்கிலும் இரண்டாவது நிகழ்ச்சி ரவாங்கிலும் நடந்தப்பட்ட நிலையில் அதன் தொடர் நிகழ்வு தாமான்  ஶ்ரீ மூடாவில் வரும் 17ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு இங்குள்ள அஸாலியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்று அவ்வியக்கத்தின் தலைவர் பாப்பராய்டு தெரிவித்தார்.

2007இல் இந்தியர்களிடையே ஏற்பட்ட அரசியல் எழுச்சி கொஞ்ச கொஞ்சமாக மழுங்கிக் கொண்டே வருகிறது. நடப்பு அரசியல் சூழல், நிலையற்ற அரசியல் தன்மை காரணங்களால் அரசியலை வெறுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படும் சூழலில் அரசியல் நிலைபாட்டிலிருந்து இந்தியர்கள் ஒதுங்கி  விடக்கூடாது எனும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக தலைவர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமட் மாட் சாபு ஆகியோர் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகையால் சுற்றுவட்டார மக்கள் இந்த அரசியல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளுமாறு பாப்பராய்டு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply