மலேசிய இந்துக் கோயில்களின் இணையத்தள முகவாயில் அறிமுகம் கண்டது ! டத்தோ ஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார் !

Malaysia, News, Religion, Spiritual, Temples

 367 total views,  1 views today

கோலாலம்பூர் – 16-10-2022

நாட்டில் உள்ள இந்துக் கோயில்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையத்தள முகவாயில் (Portal) நேற்று மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ மு சரவணன் அவர்களால், அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல் ஒருங்கிணைப்புப் பிரிவு, மனிதவள அமைச்சரின் அலுவலகக் கண்காணிப்பில் கடந்த ஒரு வருட காலமாகச் செயல்பட்டு வருகிறது.

மலேசிய இந்துக் கோவில்கள் மின்னூடக பரிணாம வளர்ச்சியை நோக்கி என்ற கொள்கையை மையப்படுத்தி இந்த முகவாயிலில், ஆலயங்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படும். இப்பிரிவுன் 3 முக்கிய இலக்குகளுடன் (objectives) இயங்குகிறது.

இலக்கு 1

மலேசிய இந்துக் கோவில்களின் தகவல்களையும் முழுமையான விவரங்களையும் சேகரித்தல்;

இலக்கு 2

கோவில்களின் வரலாறு, தனித்துவம், விழாக்கள் மற்றும் இதர கூறுகளைச் சேகரித்துப் பொது மக்கள் பார்வைக்கு வைத்தல்;

இலக்கு 3

மலேசிய இந்துக் கோவிக்களின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவாயில் உருவாக்குதல்.

இணையத் தள முகவாயிலின் சிறப்பு அம்சமாக கோவில்களின் தல வரலாறு, கோவில்களின் தனித்துவங்கள், கோவில் பூஜை நேரம், சிறப்பு விழாக்கள், அர்ச்சனை, விளக்கு, பிரசாதக் கட்டணம், சமூக நடவடிக்கைகள், ஆலயப் பொது வசதிகள், கோவில் செயற்குழு உள்ளிட்ட தரவுகள் மிக எளிமையான முறையில் உலக மக்களின் பார்வையில் படும் வண்ணம் அமையவிருக்கிறது.

இவ்விவரங்கள் அனைத்தும் https://myhindutemple.gov.my என்ற இணையத்தள முகவாயிலில் 15 ஆக்டோபர் 2022 முதல் காணலாம். புதிய தரவின் படி 100 கோயில்களின் முழு தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தரவுகளும் தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் பதிவிடப்படும்.

வருங்காலங்களில், இப்பிரிவின் மூலம், ஆலய அதிகாரப்பூர்வ பதிவு, ஆலய ஒருங்கிணைப்பு ஆலய நலன் காக்கும் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேல் விவரங்களுக்கு:

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல் ஒருங்கிணைப்புப் பிரிவு
data.myhindutemple@gmail.com
பாலா (011-1578 1890) | பிரகாஷ் (010-271 0258)

Leave a Reply