
மலேசிய எழுத்தாளர்களின் நூல்களுக்கு விற்பனை வாய்ப்பு
510 total views, 1 views today
கோலாலம்பூரில் புத்தகக் காட்சி – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு
கோலாலம்பூர் – 2 ஏப்பிரல் 2022
நம்நாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாக்கும் நோக்கோடும் விற்பனைச் சந்தையை உருவாக்கவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முதன் முறையாகப் புத்தகக் காட்சியைக் கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் கூறினார்.
1.5.2022ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் அமைந்துள்ள ஒய்.எம்.சி. ஏ. மண்டபத்தில், காலை மணி 10.00 முதல் மாலை மணி 6.00 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும்.
எழுத்தாளர்கள் நேரடியாகத் தங்களின் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கலாம். 15 முதல் மேசைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மேசைக்கும் தலா 100 ரிங்கிட் வசூலிக்கப்படும். ஒரு மேசையை மூன்று அல்லது நான்கு எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
புத்தகக் காட்சிக்கு வருகை புரியும் பார்வையாளர்களுக்காகச் சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்காகச் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
குறிப்பாகப் படித்ததைச் சொல்கிறேன் எனும் நிகழ்ச்சியில் தாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து மாணவர்கள் கருத்தை வெளிப்படுத்தலாம்.
சிறப்பாகக் கருத்துரைக்கும் மாணவர்களுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பரிசுகளை வழங்கும்.
பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘வாசிப்பு பழக்கத்தைத் பெற்றோர்களே ஊக்குவிக்கிறார்கள்/ இல்லை’ எனும் தலைப்பில் மாணவர்கள் உரையாற்றுவார்கள்.
உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இங்கு விற்பனைக்கு வைக்கப்படும். இந்த முயற்சி வெற்றி பெற எழுத்தாளர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் நிறைவாக இருந்தால் இனி ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் புத்தகக் காட்சி தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாட்டை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் செய்யும்.
ம.இ.கா. தலைவர்களின் ஆதரவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனிதவள அமைச்சரும் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களைச் சங்கப் பொருப்பாளர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது ம.இ.கா. தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தைப் புத்தகக் காட்சிக்காக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களும் இதே போன்ற ஆதரவைத் தெரிவித்தார் .
ஆனால், குரானா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சியை நடத்த முடியாதச் சூழ்நிலை ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இன்னும் விரிவான அளவில் புத்தகக் காட்சியை நடத்துவதற்கு எழுத்தாளர் சங்கம் முயற்சி செய்யும். இந்த வாய்ப்பை எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.
ஆர்வம் உள்ளவர்கள் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 0177008981 என்ற தொலைபேசியில் சங்கச் செயலாளர் மோகனன் பெருமாள், 0192449844 என்ற எண்ணில் சங்கப் பொருளாளர் ஞான சைமன், 012638 7901 எண்ணில் நாவலாசிரியர் மு.மதியழகன் ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.