“மலேசிய குடும்பம்” தாரகமந்திரத்தை மனதில் விதைப்போம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News

 170 total views,  1 views today

கோலாலம்பூர்-

மலேசியாவில் இன நல்லிணக்கத்தை பேணுவதற்கு பல்லின மக்கள் அனைவரும் ஒன்றாக கைகள் கைகோர்த்து “மலேசிய குடும்பம்” எனும் தாரகமந்திரத்தை மனதில் விதைத்து பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் மலேசியாவில் மலாய்க்காரராக, இந்தியராக, சீனராக, பிற இனத்தவர்களாக இருந்தாலும் மற்ற இனங்களின் கலை, கலாச்சாரம், பண்பாடுகூறுகளையும் தெரிந்து வைத்துத் கொள்வதோடு அவர்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து மலேசியர் என்ற எண்ணத்தில் மலேசிய குடும்பமாக இந்தியர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை கொண்டாடுவதன் வழி இன ஒற்றுமை, இன நல்லிணக்கத்தை பேண முடியும் என்று தமது பொங்கல் வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இந்த பொங்கல் திருநாள் இந்தியர்களின் பாரம்பரிய விழாவாக இருந்தாலும் அதனை மற்ற இனத்தவர்களுடன் இணைந்து கொண்டாடுவதால் எந்த தவறும் இல்லை. அந்த வகையில் மலேசிய திருநாட்டில் பொங்கல் விழா தேசிய விழாவாகவே பிற இனங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதை காண முடிகிறது. இந்த பொல்கல் விழா மலேசிய குடும்ப விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

ஒரு நாட்டில் அனைத்து பாரம்பரிய விழாக்களும் ஒரு குறிப்பிட்ட இனத்தினால் மட்டுமல்லாம் மற்ற இனங்களுடன் இணைந்து கொண்டாடுவதால் இன ஒற்றுமை மேலோங்கும் என்பதால் பொங்கல் பாரம்பரிய விழா மலேசியர்களின் விழாவாக கொண்டாடபட வேண்டும். மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மலாய், ஆங்கிலம் மொழிகளை அக்கறையோடு கற்றுக் கொள்கின்றனர். மேலும் தமிழ், சீனம் போன்ற தங்கள் மொழிகளையும் அவர்கள் கையாளுகின்றனர். மலாய்க்காரர்களும் தமிழ், சீன மொழிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். பொங்கல் போன்ற பிற இனத்தவர்களின் பாரம்பரிய விழாக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில்தான் சமூகங்களுக்கிடையில்ஒருமைபாட்டை ஏற்படுத்த முடியும். இந்தியர்களும் இதனை உணர்ந்து மலேசிய குடும்பமாக மற்ற இனத்தவர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட வேண்டும்.


மலேசிய இனத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும். நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் “நான் மலேசியர்” என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறோம். ஆனால், மலேசியாவில் மட்டும் அதனை பயன்படுத்தத் தவறி் விடுகிறோம். ஆகையால், மலேசிய இனத்தை உருவாக்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். இதற்கு பொங்கல் போன்ற பாரம்பரிய விழாக்கள் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்தியர்கள் அனைவருக்கும் தமது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply