மழைக்காக ஒதுங்கியவர்களை லோரி மோதி தள்ளியது- இருவர் மரணம்

Malaysia, News

 236 total views,  3 views today

குரூன் –

மழைக்காக ஒதுங்கி நின்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது லோரி மோதிய சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

கெடா- குரூனின் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 92.8ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட விபத்தில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர். பலர் அருகேயுள்ள கால்வாயில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

9 மோட்டார் சைக்கிளோட்டிகள் மழைக்காக ஒதுங்கியிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லோரி இவர்களை மோதி தள்ளியது.

இவ்விபத்தை ஏற்படுத்திய லோரி ஓட்டுனரை மேல் விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்தனர்.

Leave a Reply