மழைக்காலத்தில் தேர்தல் கிடையாதா ?

Malaysia, News, Politics, Polls

 14 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 22 செப் 2022

நேற்று நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்வரும் 15வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் – மழைக்காலத்தில் நடத்தப்படாது எனும் பிம்பத்தைக் காட்டியிருக்கிறார் அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவர்.

மாட்ஸிர் காலிட் கூற்றின்படி, தேர்தல் குறித்து நேற்றையக் கூட்டத்தில் பேசப்பட்டிருந்தாலும்கூட, வெள்ளப் பிரச்சனைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தேர்தல் தேதியை பிரதமரே அறிவிப்பார், அதனை முடிவு செய்ய அவருக்கே முழு அதிகாரம் இருக்கிறது என மாட்ஸிர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளப் பிரச்சனை குறித்து பிரதமர் நன்கு அறிந்திருப்பதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் இது குறித்து அவருக்கு விளக்கமளித்திருப்பதாகவும் சொன்னார்.

எனவே, வெள்ள விவகாரம் உட்பட சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படும் எந்தச் செய்தியையும் பொது மக்கள் நம்ப வேண்டாம் என புறநகர் மேம்பாட்டு அமைச்சருமான மாட்ஸிர் காலட் குறிப்பிட்டார்.

Leave a Reply