மழைக்காலத்தில் தேர்தல் : எதிர்க்கட்சியினர் அஞ்சுகின்றனர் ! – ஸாஹிட்

Malaysia, News, Politics

 34 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 19 செப் 2022

தோல்வியைத் தழுவி விடுவோம் என எதிர்க்கட்சியினர் அஞ்சுவதால் மழைக்காலத்தில் தேர்தலை எதிர்க்கின்றனர் என தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

மழைக்காலத்திலும் நாட்டின் 15வது பொதுத் தேர்தலை தேசிய முன்னணி எதிர்கொள்ளும் என அவர் சூளுரைத்தார்.

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமராக இருந்த துன் மகாதீர்கூட 1999இல் நவம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்தி இருந்தார் என்பதை நம்பிக்கைக் கூட்டணி மறந்து விட்டனர் என்றார் ஸாஹிட்.

ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு 18 திசம்பர் 2021 இல் கூட சரவாக் மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியினர் மோசமானத் தோல்வியைத் தழுவி இருந்தனர்.

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும், முன்னதாக சம்மதித்தப்படி அன்வார் இபுராகிமிடம் பிரதமர் பதவிஅயி துன் மகாதீர் ஒப்படைக்க வில்லை. இவை எல்லாம் மக்களிடையே நம்பிக்கைக் கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கை போய்விட்டது. இதனால், அக்கூட்டணி தோல்வி அடைந்து விடும் எனும் அச்சம் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.

எனவே, தேர்தலை தள்ளி வைத்து அந்தக் காலக் கட்டத்தில் மக்களைத் தங்கள் வசம் திருப்ப முயற்சித்து வருகிறார்கள் எனவும் இதற்கு தேசிய முன்னணி ஒரு போது வழி விடாது எனவும் அவர் சொன்னார்.

ஸாஹிட்டின் இந்தக் கூற்றை எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு இலக்கானது. குறிப்பாக, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸீ ரம்லி, மூடா கட்சியின் தலைவர் ஷே சாடிக், அமானா கட்சியின் உதவித் தலைவர் சாலாஹுடின் ஆயூப் ஆகியோர் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலை மழைக் காலத்தில் நடத்திவது ஏற்புடையது அல்ல. வெள்ளப் பிரச்சனை குறித்து ஸாஹிட் அறிந்திருக்கவில்லையா ?

கடந்த ஆண்டு இறுதியுல் ஏற்பட்ட வெள்ளத்தால் 55 உயிர்கள் பலியானதும் 500,000க்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்விடங்களை இழந்ததையும் அவர் மறந்து விட்டாரா ?

அவ்வெள்ளத்தால் பொது உடமைச் சேதம், வேளாண்மை நாசம் ஆகியவை ரிம 6 பில்லியனுக்கும் மேலான நட்டத்தை ஏற்படுத்தியதை எவ்வாறு மறக்க முடியும் எனவ் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply