மழைக்காலப் பொதுத் தேர்தல் : மழை பெய்தால் குடை பிடித்துக் கொள்ளலாம் ! – அகமாட் மஸ்லான்

Malaysia, News, Politics, Polls

 91 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 20/10/2022

மழைக்காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா எனும் கலக்கம் தலை தூக்கி இருக்கும் நிலையில், எவ்வாறான வானிலையானாலும் மக்கள் வாக்களிக்க வெளியில் வந்துதான் ஆக வேண்டும் என அம்னோவின் பொதுச் செயலாளர் அகமாட் மஸ்லான் கூறி இருக்கிறார்.

மழைக்காலம் வாக்களிக்கும் மக்களின் விழுக்காட்டை பாதிக்காதா என அவரிடம் வினவியபோது, வாக்களிக்க வராததற்கு மழைக்காலத்தைப் பொது மக்கள் இரு காரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.

“கடந்த 14 முறை பொதுத் தேர்தல் நடந்தபோது கலவரமா மலேசியாவில் நடந்தது ? இப்போதும் அப்படியானச் சூழல் இல்லையே. நாடு அமைதியாகத்தானே இருக்கிறது.”

அகமாட் மஸ்லான் – அம்னோ பொதுச் செயலாளர்

மழை பெய்தால் குடையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்த அவர், மக்கள் வாக்களிக்க வெளியில் வர வேண்டும் என வலியுறித்திக் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலின்போது வாக்களித்தோர் 82.32 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை அதைவிடக் குறைவாக, 75% மட்டுமே பதிவு செய்யக்கூடும் என அகமாட் மஸ்லான் கருத்திரைத்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் 14,940,624 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 12,229,514 பேர் வாக்களித்து தங்களின் மக்களாட்சி உரிமையை நிலை நாட்டினார்.

இம்முறை 75 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களிக்க வருவார்கள் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், எண்ணிக்கை அளவில் கடந்தப் பொதுத் தேர்தலைக் காட்டிலும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மிக அண்மையத் தகவலின்படி, கடந்த ஆகஸ்டு மாதம் வரை 21,186,761 பேர் பதிவு பெற்ற வாக்காளர்களாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, 18- 20 வயதுக்கு உட்பட்ட முதன் முறையாகப் பொதுத் தேர்தலில், வாக்களிக்க இருக்கும் இளையோர்கள் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் மேலனவர்கள் ஆவர்.

அலட்சியமான வாக்காளர்கள்

வாக்களிக்கத் தகுதி பெற்றூ பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கையானது தங்களின் வாக்களிக்கும் உரிமையின்மீது குரைவான நாட்டம் கொண்டவர்களும் அடங்கும் என்றார் அகமாட் மஸ்லான்.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாதவர்களும் அந்த மொத்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வாக்களிக்க வருகிறவர்கள் இம்முறை 75 % ஆக இருக்கலாம் எனத் தாம் கணித்திருப்பதாக அவர் விளக்கினார்.

Leave a Reply