மஹா அன்பு சமூகநல இல்லத்திற்கு ஏரா சூரியா அறவாரியம்  உதவிக்கரம் நீட்டியது

Malaysia, News, Politics

 113 total views,  1 views today

ரா.தங்கமணி

சமூகநல இலாகாவிடமிருந்து உதவியை கிடைக்கப்பெறாத சிலாங்கூர், ஜெஞ்ஜாரோம் மஹா அன்பு சமூகநல இல்லத்திற்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்கி உதவியது ஏரா சூரியா அறவாரியம்.

பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் ஏரா சூரியா அறவாரியத்தின் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட இல்லத்தின் பிரச்சினை கொண்டு வரப்பட்டது. சமூகநல இலாகாவிடமிருந்து கிடைக்கப்பெறும் உதவித் தொகை கிடைக்கப்பெறாத காரணத்தினால் மாதாந்திர பொருள் தேவைகளுக்கு சிரமப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து ஒரு மாதத்திற்கு தேவையான பொருளுதவி செய்யப்பட்டதாக அறவாரியத்தின் இயக்குனர் நந்தகுமார் ராமையா தெரிவித்தார்.

சமூகநல இலாகாவிடமிருந்து உதவியை பெறுவதற்கு ஏதுவாக விதிமுறைகளை பூர்த்தி செய்யும் கடப்பாட்டை இந்த அன்பு சமூக இல்லம் கொண்டுள்ளதால் அதற்காக விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிதி திரட்டு விருந்துபசரிப்புக்கு ஏரா சூரியா அறவாரியம் உதவும் என அவர் சொன்னார்.

29 சிறார்களுடன் பராமரிக்கப்படும் இந்த இல்லத்திற்கு தேவையான பொருளுதவிகளோடு நிதியுதவியும் இல்லத்தின் பராமரிப்பாளர் செல்வி முனியாண்டியிடம் நந்தகுமார், அறவாரிய பொறுப்பாளர்கள் ஆகியோர் வழங்கினர்.

Leave a Reply