மாட்டுக் கொட்டகை போல வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தங்குமிடம் இருக்கக் கூடாது ! – அமைச்சர் சிவக்குமார்

Malaysia, News

 14 total views,  3 views today

குமரன் | 25-1-2023

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகள் கொடுக்கும் தங்குமிடம் மாட்டுக் கொட்டகை போல இருக்கக் கூடாது என மனிதவள அமைச்சர் சிவக்குமார் அறிவுறுத்தினார்.

பெருந்தொற்று அல்லது எதிர்பாராத பேரிடர் காலத்தில் விதியை மீறிய அவ்வாறான நிலை அவர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் அவர் சொன்னார்.

அவர்களை சக மனிதர்களாக மதித்து நடத்த வேண்டும். அவர்களை நாம் நடத்தும் முறையை வைத்து இந்த உலகமே நம்மை மதிப்பிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காப்பார் சாலையில் அமைந்துள்ள 3 இரப்பர் – மரப் பொருட்கள் தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குமிட வசதி குறித்த அதிரடி சோதனையில் அமைச்சின் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது களத்தில் இறங்கிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அதிரடிச் சோதனையில் துணை அமைச்சர் முஸ்தாபா சாக்முட்டும் அமைச்சின் உதவி தலைமைச் செயலாளர்  மணியமும் கலந்து கொண்டனர்.

படுக்கை – மெத்தை ஏற்படுத்திக் கொடுக்காதது, மோசமான சமைக்குமிடம், மிகக் குறுகலான அறை ஆகிய விதிமீறல்கள் அந்த அதிரடிச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை முழுமை அடைந்த பிறகு அந்த மூன்று தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், அத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு பெர்சேசோ கட்டணத்தைச் செலுத்தப்பட வில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

அங்கு மியான்மார், வங்காள தேசம், நேப்பால் ஆகிய நாடுகளைச் செர்ந்தவர்கள் பணி புரிகிரார்கள்.

Leave a Reply