மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 234 total views,  2 views today

கோலாலம்பூர் – 18 செப் 2022

கடந்த 17.09.2022 ஆம் நாள் மாணவர் முழக்கம் 2022 காலிறுதிச் சுற்று நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டி இயங்கலை முறையில் நடந்தது. பேரா மற்றும் பகாங் மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். ஒருவர் மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் சூரியவேந்தன். மற்றொரு வெற்றியாளர் லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவி ரக்‌ஷிதா.

சிறப்பான படைப்பினை வழங்கியதோடு, நல்ல வாதத் திறமையை வெளிப்படுத்தி நடுவர்களின் வினாக்களுக்கும் தகுந்த பதிலை வழங்கி  இவர்கள் இருவரும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுகின்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இவர்களின் இந்த வெற்றியானது தத்தம் பள்ளிகளுக்கு மட்டுமன்றி பேரா மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.

– நன்றி : புறவம்

Leave a Reply