மாணவி காயத்திரிக்கு கல்வி நிதியுதவி

Uncategorized

 350 total views,  4 views today

டி.ஆர்.ராஜா

ஜோர்ஜ்டவுன்-

சட்டத்துறையில் இறுதியாண்டு கல்வியை மேற்கொண்டு வரும் குமாரி காயத்திரி சந்திரசேகரன் எதிர்கொண்டுள்ள நிதிச்சுமையை போக்கும் வகையில் சமூகச் சேவையாளர் காளிதாஸ் இராமசாமி ஏற்பாட்டில் நிதி திரட்டப்பட்டு அம்மாணவியிடம் ஒப்படைக்கப்பட்டது.


யுனைடெட் கிங்டாமில் தனது இறுதியாண்டு கல்வியை மேற்கொண்டு வரும் காயத்திரி பிரீக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் இரண்டாண்டு கல்வியை நிறைவு செய்துள்ளார்.

இவ்வாண்டு தமது தந்தை காலமானதால் அந்நாட்டிற்குச் சென்று கல்வியை தொடர முடியாத நிலையை எதிர்கொண்ட மாணவி காயத்திரி நிதிச்சுமையையும் எதிர்கொண்டார்.


இந்நிலையில் காளிதாஸ் இராமசாமி ஏற்பாட்டி சில நல்லுள்ளங்களில் ஆதரவோடு 9,235 வெள்ளி நிதியுதவி திரட்டப்பட்டது. இன்று அவரின் அலுவககத்தில் நடைபெற்ற நிதி கையளிப்பு நிகழ்வில் மாணவி காயத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமசந்திரன் கல்வியை தொடர்வதற்கு நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் இன்னலை போக்கும் வகையில் பினாங்கு மாநிலத்தில் கல்வி அமைப்பு ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மாதந்தோறும் ஒவ்வொருவரும் 10 வெள்ளியை வழங்கி உதவுவதன் மூலம் மாணவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை போக்க முடியும் என்று கூறிய அவர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் வாயிலாக இம்மாணவிக்கு இயன்ற உதவிகள் ஏற்பாடு செய்யப்படும் என சொன்னார்.


இந்நிகழ்வில் மாணவி காயத்திரிக்கு உதவி புரிந்த நன்கொடையாளர்கள் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply