மாநில அரசாங்கங்களும் கலைக்கப்பட பிரதமர் ஆலோசனை !

Malaysia, News, Polls, Uncategorized

 123 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலச் சட்டமன்றங்களும் கலைக்கப்பட பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், சபா, சரவாக், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநில அரசாங்கங்கள் கலைக்கப்படத் தேவை இல்லை என்றார் அவர்.

கடந்த செப். 2020 சபா மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டது. மலாக்கா, சரவாக் ஆகிய முறையே கடந்த  2021 நவம்பர் – திசம்பர் மாதங்களில் மாநிலத் தேர்தலை நடத்தின. இவ்வாண்டு மார் மாதம் ஜோகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில், நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய பிரதமர், அவ்வாறு ஒன்றாக நடத்தப்பட்டால் மக்களுக்கு பாரமாக இருக்காது எனவும் இரட்டிப்புப் பொருட் செலவு ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும் என்றார் அவர்.

அதே சமயம், ம.,இ,கா,வின் தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவில்க்கயில், தமது கூட்டணியில் அமைந்துள்ள அனைத்து மாநில  அரசாங்கங்களும் கலைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

ஆனால், மலாக்கா, ஜோகூர், சபா ஆகிய சட்டமன்றங்கள் கலைக்கப்படாது என்றும் சொன்னார்.

Leave a Reply