மாநில அரசுகளை கலைக்காத பிஎச் முடிவு தேமுவுக்கு சாதகமே- வீரன்

Malaysia, News, Politics

 195 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் இப்போது நடைபெற்றால் தாங்கள் ஆட்சி செலுத்தும் மாநில அரசுகளை கலைக்க மாட்டோம் என்று கூறியுள்ள பக்காத்தான் ஹராப்பானின் முடிவு விஷபரீட்சையானது எனவும் இதனால் தேசிய முன்னணிக்கே லாபம் எனவும் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் தற்போது சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலோடு இம்மாநிலங்கள் தேர்தல் நடத்தப்படாவிட்டால்  அதனால் தேமுவுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை.

ஆனால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்ற தேசிய முன்னணி வியூகங்களை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் தேசிய முன்னணி புத்ராஜெயாவை கைப்பற்றிய பின்னர் நடைபெறும் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தீவிரம் காட்டி அம்மாநிலங்களை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றக்கூடும்.

கடந்த மூன்று தவணையாக எதிர்க்கட்சி வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்றும் தருணத்தை எதிர்க்கட்சியினரே ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இது வரவேற்கத்தக்கது ஆகும் என்று தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் கூறினார்.

Leave a Reply