மாநில அரசுகளை கலைப்பது தொடர்பில் பாஸ் இன்று முடிவு செய்யும்

Malaysia, News, Politics

 106 total views,  1 views today

தங்களது அதிகாரத்திற்கு உட்பட ,மாநில அரசுகளை கலைப்பது தொடர்பில் இன்று மதியம் முடிவு செய்யப்படும் என்று பாஸ் கட்சி தெரிவித்தது.

15ஆவது பொதுத் தேர்தலுடன் தாங்கள் ஆட்சி செலுத்தும் கிளந்தான், கெடா, திரெங்கானு ஆகிய மாநில அரசுகளை கலைக்க வேண்டுமா? என்பது தொடர்பில் உச்சமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

தேர்தலுக்கு மக்கள் இன்னமும் தயாராக நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் ஓர் இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று பாஸ் கட்சியின்  உதவித் தலைவருமான அவர் சொன்னார்.

Leave a Reply