மாநில எல்லைகளை இனி கடக்கலாம்- பிரதமர்

Malaysia, News

 193 total views,  1 views today

கோலாலம்,பூர்-

இளையோருக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 90%-ஐ எட்டியவுடன் மாநில எல்லைகள் திறக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது. நாளை 11ஆம் தேதி முதல மலேசியர்கள் மாநில எல்லைகளை கடந்து பயணிக்கலாம்.

மாநில எல்லைகள் திறக்கப்படுவது தொடர்பில் மலேசியர்கள் எதிர்பார்த்திருந்த அந்த அறிவிப்பை பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யக்கோப் இன்று அறிவித்தார்.


‘இந்தவொரு அறிவிப்புக்காக மலேசியர்கள் பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்ததை நான் அறிவேன். வெகு நாட்களாக தங்களது தாய், தந்தையரை காணாமல் இருந்த பலர் இனி தங்களது குடும்ப உறவுகளை சந்திக்கலாம். ஆனால் முழுமையாக இரு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கே இந்த விலக்கு அளிக்கப்படும்’ என்று நாட்டு மக்களுக்கு நேரலையில் ஆற்றிய உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply