மாநில தேர்தலில் சிலாங்கூர் பிஎச்-க்கு பாதுகாப்பானது அல்ல

News, Politics

 76 total views,  3 views today

கோலாலம்பூர்-

மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டால்  பக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக திகழ்ந்து வரும் சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழாது என்று ஆய்வாளர் நோர் நிர்வாண்டி மாட் நோர்டின் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் காப்பார், கோல லங்காட், உலு சிலாங்கூர், தஞ்சோங் காராங், ஆகிய தொகுதிகளை கைப்பற்றியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் சபாக் பெர்ணாம், சுங்கை பெசார் ஆகிய தொகுதிகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் அடைந்துள்ள வெற்றி மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்று கணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

Leave a Reply