மாபெரும் நன்நீர் அருந்தும் நிகழ்வு

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 46 total views,  1 views today

– குமரன் –

பத்து காஜா – 25/10/2022

பேரா மாநில அளவில் மாபெரும் நன்நீர் அருந்துதல், காய்கறி கலவை (சாலட்) உண்ணுதல்,  நலணுண்ணுயிரி பானம் (யாகுல்ட்) அருந்தும் நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெரும் நோக்கத்தில், பேரா மாநில கல்வி இலாகாவும் மாநில முதல்வரின் ‘செகு சாராணி’ திட்டத்தின் கீழ் ‘ஏக்கோ  ஸ்கூல் பென்டிடிக்கான் லெஸ்தாரி’ (ECO SCHOOL PENDIDIKAN LESTARI) @ 2030 நலமிகு பேரா அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலாய், சீன, தமிழ், இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தென் கிந்தா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் ஒரே தமிழ்ப்பள்ளியாக கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமைக்குறியது.

மாணவர்களுக்கென அழகிய நீர்ப்புட்டி, காய்கறி கலவைத் தயாரிக்கத் தேவையான காய்கறிகள், நலணுண்ணுயிரி பானம் அனைத்து ஏற்பாட்டுக் குழுவினர்களால்  இதில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

தலைமையாசிரியார், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பில் குறித்த நேரத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. மாணவர்களுக்கு இந்நிகழ்வின் முக்கிய நோக்கத்தை விளக்கிக் கூறி தன்முனைப்பு ஊட்டினார் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ஆ.லோகேஸ்வரி ஆறுமுகம்.

மேலும் இப்பள்ளி பல சாதனைகளைத் தொடர்ந்து நிலைநாட்ட வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply