
மாமன்னரிடம் பொய்யுரைத்துள்ள முஹிடின்
313 total views, 1 views today
கோலாலம்பூர்-
தமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மாமன்னரிடம் பொய்யுரைத்து அவரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது ஒரு துரோகச் செயல் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிக் கூட்டணியிடன் கைகோர்த்துள்ள பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை.
சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது நாட்டின் முதன்மையானவராக கருதப்படும் மாமன்னரிடன் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கியுள்ளது துரோகச் செயலாகும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தலைவர்களான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், முகமட் மாட் சாபு, லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.