
மார்ச் 12இல் ஜோகூர் தேர்தல்
248 total views, 1 views today
கோலாலம்பூர்-
ஜோகூர் மாநில தேர்தல் வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்றும் மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் தகுதி வாய்ந்த 2,597,742 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்றும் இவ்வாண்டு ஜனவரி 21ஆம் தேதி வரை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்கவுள்ளனர் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.