மாற்றத்தை விரும்பும் இந்திய சமூகம்- தீபக்

Malaysia, News, Politics

 183 total views,  1 views today

கிள்ளான் –

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்தியர்களின் ஆதரவு தமக்கு பலமாக உள்ளது. ஒரு மாற்றத்தை விரும்பும் மக்கள் நிச்சயம் தமக்கு ஆதரவளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது என்று சுயேட்சை வேட்பாளர் தீபக் ஜெய்கிஷன் தெரிவித்தார்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால் இத்தொகுதி இன்னமும் மேம்பாடு காணாமலேயே இருக்கிறது.

மக்களுக்கான வாழ்வாதார சூழல், மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை முன்னெடுக்கப்பட வேண்டும். அதுதான் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்.

அதன் அடிப்படையில் மக்களுக்கான திட்டங்களை வகுத்துள்ள தம்மை இந்திய சமூகத்தினர் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். நம்பிக்கயான வகையில் மக்களின் ஆதரவு உள்ளது என்று இங்கு நடந்த தீபாவளி விருந்துபசரிப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோதிரம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் தீபக் ஜெய்கிஷன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply