மாற்று திறனாளிகளின் ஸ்பா, உடம்புப்பிடி மையங்களுக்கு அனுமதி வழங்குக- குணராஜ்

Malaysia, News

 404 total views,  1 views today

கிள்ளான் –

சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் செயல்பட அனுமதி அளித்துள்ள அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மையமான ஸ்பா, உடம்புப்பிடி நிலையங்கள் செயல்பட அனுமதி மறுப்பது ஏன்? என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூக தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோர்ஜ் குணராஜ் கேள்வி எழுப்பினார்.


கடந்த மே 10ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் செயல்படாமல் இருக்கும் ஸ்பா, உடம்புப் பிடி மையங்களால் 30 ஆயிரம் பேர் தங்களது வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.


பிற தொழில்துறைகள் செயல்பட அனுமதி அளித்துள்ள அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மீட்சி பெற ஸ்பா, உடம்புப் பிடி மையங்கள் தொடர்ந்து செயல்பட கடுமையான எஸ்ஓபி நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply