மாலிம் நாவாருக்கு சிறந்த வேட்பாளர் ஷாஷா

Malaysia, News, Politics

 59 total views,  1 views today

ரா.தங்கமணி

மம்பாங் டி அவான் –

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷாஷா வீரையா சிறந்த, நேர்மையான வேட்பாளர். அவர் கட்சி தாவல் செய்யமாட்டார் என்று கம்பார் நாடாளுமன்றத் தொகுதி பிஎச் வேட்பாளர் சோங் ஸெமின் தெரிவித்தார்.

ஷாஷா மாலிம் நாவார் தொகுதிக்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர். 20 வயதில் ஜசெகவில் சேர்ந்தார்.. வலுவான அரசியல் சித்தாந்தம் கொண்டவர். 25 ஆண்டுகளாக ஜசெகவில் செயலாற்றி வருகிறார். பக்காத்தான் ராக்யார், பக்காத்தான் ஹராப்பான் காலத்தில் ஒருமுறை நிர்வாகச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

கட்சி தாவல் செய்த ஒரு சட்டமன்ற உறுப்பினரால் இரண்டு துரோகங்கள்  நடந்த ஒரே தொகுதி மாலிம் நாவார் என்பதால் வேட்பாளர் விவகாரத்தில் ஜசெக மிக கவனமாக ஷாஷா தேர்ந்தெடுத்துள்ளது.

ஷாஷா மாலிம் நாவாரை சேர்ந்தவர் அல்லர் என்ற போதிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவர் இங்கேயே குடியேறிவிட்டார். மாலிம் நாவார் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நபராக ஷாஷா திகழ்வார் என்பதில் ஐயம் கிடையாது.

ஆதலால் மாலிம் நாவார் வாக்காளர்கள் ஷாஷாவுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்குவார். ஷாஷாவின் அனுபவம் மாலிம் நாவாருக்கு சிறந்த வளர்ச்சியை கொண்டு வரும் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply